சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கானலும்

kanalum · உம்மை எண்ணும்மை

1
கடற்கரையும், கடற்கரைச் சோலையும்
and the seashore
உம்மை எண்ணும்மை

கழியும் கானலும், Aka 170–1 – கானலும் கழறாது கழியும் கூறாது, Nat 87–9 – பரதவர் மகிழ்ச்சியும் பெருந்தண் கானலும் நினைந்த அப் பகலே, கடற்கரையும் Kuru 81–6 – கடலும் கானலும், Kuru 310–2 – கானலும் புலம்பு நனி உடைத்தே வானமும் நம்மே போலும் மம்மர்த்து ஆகி, Pari 15–11 – கடலும் கானலும் போலவும், Pathit 22–6 – கடலும் கானமும்

2
கடற்கரைச் சோலையும், the seashore (இனிப் புலம்பின்றே கானலும், Nat 187–3 – பல் பூங்கானலும் அல்கின்றன்றே)
உம்மை இழிவு சிறப்பு உம்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கானலும் (kanalum), உம்மை எண்ணும்மை, 'and the seashore'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கானலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு