சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழி

ozhi

1
நீக்கிய
removed

இருவி கொய்து ஒழி புனமும்

2
கைவிட்டு
abandoned

உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்

3
தொலைத்த
lost

வாழை வான் பூ ஊழ் உறுபு உதிர்ந்த ஒழி குலை அன்ன திரி மருப்பு

4
எஞ்சிய
left over

புலி தொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழி ஊன்

5
நீங்கிய
ended

ஆட்டு ஒழி பந்தின்

6
விலகிச் சென்ற
those that moved away

ஒழி திரை வரித்த வெண்மணல்

7
பிரிந்த
separated

கலை ஒழி பிணையின் கலங்கி

8
நீ கைவிடு
you abandon

யாமும் ஒழி என அல்லம் ஆயினம்

9
நீ நீக்கு
you remove
10
முடிந்து அகன்ற
ended and gone

விழவு ஒழி வியன் களம் கடுப்ப, 360–3 – விழவு ஒழி களத்த

11
விழுந்த
fallen, dropped

ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு

12
செய்து நீங்கிய
performed and left

உழவு ஒழி பெரும் பகடு

13
உயிரிழந்த
lost life

பொருது ஒழி நாகம்

14
தானே விழுந்தது
fell by itself

ஒழி எயிறு அருகு எறிந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழி (ozhi), 'removed'. நற்றிணை 6; அகநானூறு 4; புறநானூறு 2; நெடுநல்வாடை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை